சென்னை: கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை தொடங்கிய நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது. சேலம், ஈரோடு, கோவை, போத்தனூர் வழியாக சென்னையில் இருந்து கொல்லத்திற்கு மூன்று சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
போத்தனூர் வழியாக கொல்லம் செல்லும் ரயில் விபரம்:
சென்னை - கொல்லம் சிறப்பு ரயில் (06061) வரும் 23-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி வரை வாரந்தோறும் புதன்கிழமை அன்று இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிற்பகல் 3:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:15 மணிக்கு கொல்லத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (06062) கொல்லத்தில் இருந்து காலை 8:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 03:50 மணிக்கு சென்னையை வந்தடையும். வரும் 24 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி வரை வாரத்தின் வியாழக்கிழமை நாட்களில் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாஸ்சேரி, திருவாலா, செங்கனூர், மாவேலிகாரா, காயம்குளம், சாஸ்தான்கோட்டா ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
Special Trains between Chennai Egmore - Kollam
— DRM Salem (@SalemDRM) November 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
In view of Sabarimalai Festival Season.
The trains run via Salem, Erode, Tiruppur, Coimbatore, Podanur.@GMSRailway pic.twitter.com/8uSgDOH5RV
">Special Trains between Chennai Egmore - Kollam
— DRM Salem (@SalemDRM) November 17, 2022
In view of Sabarimalai Festival Season.
The trains run via Salem, Erode, Tiruppur, Coimbatore, Podanur.@GMSRailway pic.twitter.com/8uSgDOH5RVSpecial Trains between Chennai Egmore - Kollam
— DRM Salem (@SalemDRM) November 17, 2022
In view of Sabarimalai Festival Season.
The trains run via Salem, Erode, Tiruppur, Coimbatore, Podanur.@GMSRailway pic.twitter.com/8uSgDOH5RV
கோயம்புத்தூர் வழியாக கொல்லம் செல்லும் ரயில் விபரம்:
மற்றொரு சிறப்பு ரயில் (06063) சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மதியம் 02:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 05.30 மணிக்கு கொல்லத்திற்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி வரை வாரத்தின் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக சிறப்பு ரயில் (06064) கொல்லத்தில் இருந்து காலை 8:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 03:50 மணிக்கு சென்னையை வந்தடையும். வரும் ஜனவரி 29 ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தோறும் ரயில் இயக்கப்படுகிறது.
பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கனாஸ்சேரி, திருவாலா, செங்கனூர், மாவேலிகாரா, காயம்குளம், சாஸ்தான்கோட்டா ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "தி ஈகிள் இஸ் கம்மிங்" - ட்விட்டரில் கம்பேக் கொடுக்கும் ட்ரம்ப்!