ETV Bharat / state

நிலத்திற்காகத் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன் - காவல்துறையினர் விசாரணை

சேலம்: கொண்டாலம்பட்டி அருகே நிலத் தகராறில் பெற்ற மகனே தந்தையைக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Son arrested for killing his father
Son arrested for killing his father
author img

By

Published : Jan 21, 2020, 1:18 PM IST

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகேயுள்ள ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (62). இவருக்கும் இவரது மகன் பூபதிக்கும் ஆறுமாதத்திற்கு முன்பு வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக, பழனிச்சாமி தனது மகனை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் பூபதி தனது தந்தையிடம் வீட்டிற்கு அருகேவுள்ள காலி இடத்தை தனக்கு எழுதிக்கொடுக்கமாறு தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அதற்கு பழனிச்சாமி மறுப்பு தெரிவிக்கவே, சிறிது நேரத்திற்குப் பிறகு தூங்கிக்கொண்டிருந்த தந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் கொலைக்குப் பயன்படுத்திய கத்தியை அருகேவுள்ள கிணற்றில் வீசியும் சென்றுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த நிகழ்விடத்திற்கு வந்த கொண்டாலாம்பட்டி காவல் துறையினர் பழனிச்சாமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பூபதியைத் தேடிவந்தனர்.

நிலத்திற்காக தந்தை கொன்ற மகன் கைது

இதனையடுத்து தலைமறைவாக இருந்த பூபதியை, நேற்று அதிகாலை கைதுசெய்த காவல் துறையினர், அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். பின்னர் பூபதி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க:போலியோ சொட்டு மருந்தால் குழந்தை இறப்பு: கதறும் பெற்றோர்!

Intro:வீட்டை விட்டு துரத்தியதால் மனம் உடைந்து தந்தையை கொன்ற மகன் கைது. கிணற்றில் வீசிய கத்தியை போலீசார் மீட்டு விசாரணை.

சேலத்தில் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.Body:
சேலம் கொண்டலாம்பட்டி அருகில் உள்ளது ஆண்டிப்பட்டி .
இந்த பகுதியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. ( வயது 62).
நேற்று இவரது மகன் பூபதி பழனிச்சாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் பூபதி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த கொலையை அறிந்த கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் காவலர்கள் பழனிசாமியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூபதியை கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் தனிப்படை.அமைத்தார்.
இதில் சேலம் டவுன் உதவி கமிஷனர் ஈஸ்வரன் ,காவல் ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் காவலர்கள் இடம்பெற்று விசாரித்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த பூபதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டான் .
பின்னர் பூபதி சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

பழனிசாமி தனது மனைவி இறந்துவிட்டதால்ஆண்டிபட்டி பகுதியில் தனியே வசித்து வந்தார்.
வெள்ளிப்பட்டறை கூலி வேலைக்கு சென்று வந்த பூபதி அவரது மனைவி குழந்தைகளுடன் தந்தை பழனிச்சாமியின் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு பழனிசாமி பூபதியை தனியே சென்று விடுமாறு தெரிவித்து வீட்டை விட்டு விரட்டி விட்டார். இதனால் பூபதி மனைவி குழந்தைகளுடன் அழைத்துக்கொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இதிலிருந்து பூபதிக்கும் , அவரது தந்தை பழனிசாமிக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

பழனிச்சாமியின் வீட்டுக்கு பின்புறம் உள்ள காலி நிலத்தை தனக்கு எழுதிதருமாறு பூபதி கேட்டு மிரட்டி வந்தான். இவர்களை அக்கம்பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று பழனிசாமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது பூபதி அங்கு வந்து குடி போதையில் பழனிசாமியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டான்.
கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தியை பூபதி வீட்டருகே இருந்த ஆளமான கிணற்றில் வீசி எறிந்து தப்பிச்சென்றான். இதை அறிந்த கொண்டலாம்பட்டி போலீசார் இன்று காலை கிணற்றிலிருந்து தண்ணீர் முழுவதும் அகற்றி கிணற்றில் இருந்த கத்தியை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.

தந்தையை ஆடு அறுப்பது போல கழுத்தை அறுத்து கொன்ற மகன் பூபதிக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும் என தனிப்படை போலீசாரிடம் பழனிசாமியின்
உறவினர்கள் கேட்டுக் கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.