சேலம்: மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் வனிதா-கண்மணி தம்பதியினர். கண்மணி கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு தித்மிலா (21) என்ற மகள் இருந்தார். தித்மிலா, சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் மூன்றாம் தேதி அன்று திடீரென தித்மிலா காணாமல் போயுள்ளார். இதனையடுத்து தித்மிலாவின் தந்தை கண்மணி காரிப்பட்டி காவல்நிலையத்தில் ஆகஸ்ட் நான்காம் தேதி அன்று மகளை காணவில்லை எனப் புகார் தெரிவித்திருந்தனர்.
எலும்புக்கூடாக மீட்கப்பட்ட பெண்ணின் உடல்
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (அக். 20) மின்னாம்பள்ளி பகுதியில் காசி விஸ்வநாதன் தோட்டத்தில் உள்ள கிணறில் ஒரு பெண்ணின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடாக இருந்ததை கைபற்றிய காவல்துறையினர், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் பெண் காணாமல் போனதாக வழக்கு தொடுத்தவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தித்மிலாவின் குடும்பத்தினர், இறந்து கிடந்தது தனது மகளின் சடலம் என்று கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மகளை காணவில்லை என்று புகார் கொடுத்து மூன்று மாதங்களாக காவல்துறையினர் தேடி வந்த நிலையில், தற்போது உயிரிழந்த நிலையில் கிடப்பதை கண்ட பெற்றோர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (அக். 21) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெற்றோரும், உறவினர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கோயில் உண்டியலில் கைவரிசை காட்டிய இருவர் கைது