தமிழ்நாட்டில் தற்போது அரசுப் பள்ளிகள் சரிவர இயங்காமலும் மாணவர்களின் சேர்க்கை இல்லாமலும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளை அரசு மூடுவதாக அறிவித்திருந்தது. இதனை எதிர்த்து சேலத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு பள்ளிகளை பாதுகாக வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை தாக்குதலைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் சைக்கிள் பரப்புரை பேரணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் ஜங்சன் பகுதியில் சைக்கிள் பேரணி இன்று தொடங்கியது.
பேரணியில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்த்திடவும், நீட் தேர்வை ரத்து செய்திடவும் வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் பரப்புரை மேற்கொண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.