சேலம்: மத்திய அரசின் விவசாய விரோத போக்கைக் கண்டித்து டெல்லியில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. அந்தப் பேரணியில் பங்கேற்ற விவசாயிகள் மீது டெல்லி காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசு மூன்று வேளாண் மசோதாவை திரும்ப பெற வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ. டி. கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பரபரப்பு நிலவியது.
இந்த ஆர்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், சேலம் மாவட்ட செயலாளர் கவின் ராஜ், மாவட்ட தலைவர் பகத்சிங் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பாஜகவினர் சென்ற வழிகளை மாட்டு சாணத்தால் சுத்தம் செய்த திரிணாமுல் காங்கிரஸ்!