சேலம் உத்தமசோழபுரத்தில் மாவட்ட கருவூல அலகு பிரிவின் சார்பாக கஸ்தூரிபா காந்தி பாலிக வித்யாலயா பள்ளியில் பணியாற்றும் அறிவியல் ஆசிரியர்களைக் கொண்டு பாடத்திட்டத்தில் உள்ள கடின பகுதிகளைக் கண்டறியும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி பாலிக வித்யாலயா பள்ளிகளிலிருந்து அறிவியல் பாடம் கற்பிக்கும் 13 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதில் முதல்கட்டமாக அறிவியல் பகுதியில் உள்ள கடின பகுதிகள் கண்டறியப்படும். இரண்டாம், மூன்றாம் கட்டமாக மாணவர்களுக்கு எளிமையாக விளக்கும் பயிற்சித் தாள்கள் தயாரிக்கப்பட்டு பின்னர் இதனைக் கொண்டு மாவட்டத்தில் உள்ள அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
இப்பயிற்சியை இயக்குநராக மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம், ஒருங்கிணைப்பாளராக மாவட்ட கருவூல அலகு பிரிவு முதுநிலை விரிவுரையாளர் பிரபாகரன், துணை ஒருங்கிணைப்பாளராக விரிவுரையாளர் முனைவர் கேசவன் ஆகியோர் வழங்கினர்.