ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு - வகுப்பறைகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம் - பள்ளிகள் திறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

பள்ளிகள் திறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
school reopen arrangements
author img

By

Published : Aug 30, 2021, 10:20 PM IST

சேலம்: தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.

இதையடுத்து மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டன.

கரோனா தொற்று பாதிப்பு மாநிலத்தில் தற்போது குறைந்து வரும் நிலையில் நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.

சுழற்சி முறையில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மாணவர்களின் நலன் கருதி, பள்ளி வகுப்பறைகள், பள்ளிகளின் சுற்றுப்புறங்கள், மைதானங்கள், பள்ளியில் உள்ள மேஜை, நாற்காலிகள் என அனைத்தையும் பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இந்தப் பணிகளை பணியாளர்கள் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.

பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் வரவழைக்கப்பட்டு வகுப்பு பாட அட்டவணை தயாரிக்கும் பணிகள் மற்றும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நோய் தடுப்பு வழிமுறைகள், குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சித்தா மருந்துகளை விலங்குளுக்கு செலுத்தி ஆய்வு செய்யும் வகுப்பு இன்று தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.