திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனியார் ஒப்பந்ததாரர் மூலம் துப்புரவுப் பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பணியமர்த்தப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ஊதியம் இன்றுவரை தரவில்லை எனவும், இரண்டு ஆண்டுகளாக பொங்கல் போனஸ் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டும் அதே ஆயிரம் ரூபாயை பொங்கல் போனஸ் வழங்கப்பட்டதைக் கண்டித்து தங்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனஸாக வழங்க வேண்டும் என ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் தொழிற்சங்க துணைத் தலைவர் தேவதாஸ், நகராட்சி அலுவலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின் ஒப்பந்த ஊழியர்களிடம் இரண்டு மாதங்களுக்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின்பேரில் போராட்டத்தை கைவிட்டு பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
இதையும் படிங்க: சேலத்தில் எழுப்பப்பட்ட தீண்டாமை சுவர்: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!