சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மோடி அரசு நாட்டு மக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுகிறது. அந்த அடிப்படையில்தான் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது என்பதைவிட ஒட்டுமொத்த தேசத்திற்கும் எதிரான நடவடிக்கை. இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்" என்றார்.
தொடர்ந்து, "திமுக தலைமையில் நடைபெற்ற தோழமை கட்சிகளின் பேரணி இந்திய அரசியல் அரங்கையே அதிரவைக்கும் வகையில் அமைந்தது. அந்த பேரணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.
மேலும், " பாஜகவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக உள்ள அதிமுக அரசுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" எனவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ஒரு வரலாற்று மைல்கல்’ - திருமாவளவன்