ETV Bharat / state

சேலம் போக்குவரத்து பணிமனை வரிபாக்கி - குடிநீர் இணைப்பை துண்டிக்க மாநகராட்சி முடிவு! - வரி பாக்கி

சேலம்: சேலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையினர் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை செலுத்தாத நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1
author img

By

Published : Feb 6, 2019, 9:43 PM IST

சேலம் எருமாபாளையத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது. இந்த பணிமனை மாநகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.40 லட்சம் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டண பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து பலமுறை பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவித்தும் வரி நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தினால் இன்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பணிமனைக்குள் புகுந்து குடிநீர் இணைப்பை துண்டிக்க முயற்சித்தனர். அப்போது பணிமனை ஊழியர்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து சேலம் அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் ஜெயராஜ் கூறுகையில், " தற்போது சேலம் மாநகராட்சி கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனை சரிக்கட்ட நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது. இதனையடுத்து 40 லட்ச ரூபாய் வரி பாக்கியை செலுத்தவேண்டும் என்று கூறி பணிமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். அவர்கள் உடனே செலுத்த முன்வராததால் வேறுவழியின்றி குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வந்தோம். ஆனால் பத்து லட்சம் ரூபாயை மட்டும் முதல் தவணையாக கட்டுவதாக தெரிவித்து, அதற்கான காசோலை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனையடுத்து குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம்", என்றார்.

வரிபாக்கி செலுத்தாததால் அரசு பணிமனை குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டிக்க வந்ததால் எருமாபாளையம் பணிமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:சேலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை, சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணத்தை சேலம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்தாத காரணத்தினால் , மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் இணைப்பை துண்டிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Body:சேலம் அருகில் உள்ளது எருமாபாளையம். இந்த பகுதியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை இயங்கி வருகிறது .

இந்த பணிமனை, சேலம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு 40 லட்சம் ரூபாயை சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணமாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

பலமுறை மாநகராட்சி அதிகாரிகள் பணிமனை மேலாளருக்கு தகவல் தெரிவித்தும் அவர் வரி நிலுவை தொகையை செலுத்தாத காரணத்தினால் இன்று மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பணிமனைக்குள் புகுந்து குடிநீர் இணைப்பை துண்டிக்க முயற்சித்தனர்.

அப்போது பணிமனை ஊழியர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது இதுகுறித்து சேலம் அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் ஜெயராஜ் கூறுகையில்," பல ஆண்டுகளாக 40 லட்ச ரூபாய் வரி பாக்கியை எருமாபாளையம் பணிமனை நிலுவையில் வைத்துள்ளது .

இது குறித்து முறையாக தகவல்கள் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை சேலம் மாநகராட்சியில் நிதி நெருக்கடி நிலவிவருகிறது. இதனை சரிக்கட்ட நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க நடவடிக்கையில் மாநகராட்சி இறங்கியுள்ளது.

இதனையடுத்து 40 லட்ச ரூபாய் வரி பாக்கியை செலுத்தவேண்டும் என்று கூறி பணிமனை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தோம். அவர்கள் உடனே செலுத்த முன்வராததால் வேறுவழியின்றி குடிநீர் இணைப்புகளை துண்டிக்க வந்தோம் .

ஆனால் பத்து லட்சம் ரூபாயை மட்டும் முதல் தவணையாக கட்டுவதாக தெரிவித்து, அதற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குடிநீர் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை நிறுத்தி இருக்கிறோம். குறித்த காலத்திற்குள் வரியை செலுத்தி விடுவோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர் " என்று தெரிவித்தார்.

Conclusion:அரசு பணிமனை குடிநீர் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டிக்க வந்ததால் எருமாபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

( வீடியோ மெயிலில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.