14ஆவது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடக்க வலியுறுத்தி போக்குவரத்து அனைத்து சங்க கூட்டுக் குழு சார்பில் சேலம் போக்குவரத்து தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சிஐடியு போக்குவரத்து ஊழியர் சங்க பொதுசெயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, 14ஆவது ஊதியம் பேச்சுவார்த்தையை தமிழ்நாடு அரசு உடனடியாக தொடங்க முன்வரவேண்டும் என்றும், தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ள தமிழ்நாடு அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல சேலம் மண்டலத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி, மெய்யனூர், ஜான்சன் பேட்டை, அஸ்தம்பட்டி உள்ளிட்ட 16 போக்குவரத்து கிளைகளிலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் விரைவு போக்குவரத்து சிஐடியு சங்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் என். முருகேசன், சேலம் மண்டல தொமுச சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் காமராஜ், துணை செயலாளர் ஆர்.சக்திவேல், சிஐடியு துணை பொதுச்செயலாளர் டி.செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில்: கேரள பெண்கள் உள்பட 14 பேர் கைது