ETV Bharat / state

பெண்களிடம் ரயிலில் கொள்ளை: புகைப்படம் வெளியானது

சேலம் : மாவலிப்பாளையத்தில் ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகைகள் பறித்த 4 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு ரயில்வே காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

4 பேரின் புகைப்படங்கள்
author img

By

Published : May 8, 2019, 8:54 PM IST

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மாவலிப்பாளையத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த வழியே செல்லும் ரயில்கள் மெதுவாக சென்று வருகிறது. இதனை தெரிந்துகொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று கடந்த வாரம் நான்கு ரயில்களில் பயணித்த பெண்களிடம் தங்க நகைகளை பறித்து தப்பி சென்றது. இதனால் ரயில் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சேலம் வந்து விசாரித்து தனிப்படை அமைத்தார்.

இந்த தனிப்படை சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் காவல்துறையினருடன் இணைந்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தது. இந்நிலையில், ரயில்களில் நகை பறித்த 4 பேர் வடநாட்டு கும்பல் என தெரியவந்துள்ளது. அதில் ஒருவனது பெயர் பாலாஜி. இவனது கூட்டாளிகள் அவினேஷ் மற்றும் அமுல் ராமதாஸ் , உள்ளிட்ட 4 பேர் என தெரிய வந்திருக்கிறது. தற்போது, கொள்ளையர் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரின் புகைப்படங்கள் சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கொள்ளையர்கள் 4 பேரையும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் கைது செய்திட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Salem 8.5.2019
M.kingmarshal stringer 

சேலம் அருகே ஓடும் ரயில்களில் பெண்களிடம் நகைகள்  பறித்தது4 பேர் கும்பல் 

தமிழக ரயில்வே காவல்துறையினர் 
4 கொள்ளையரின் புகைப்படம் வெளியிட்டு தேடல்

சேலம் அருகே 
மாவலிப்பாளையத்தில் ஓடும் ரயில்களில் நகை பறித்தது 4 பேர் கும்பல் என தெரியவந்துள்ளது. இவர்களது புகைப்படங்களை வெளியிட்டு ரயில்வே காவல்துறையினர் 
4 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் உள்ள மாவலிப்பாளையம் பகுதியில் ரயில்வே பாலம் கட்டப்பட்டு வருகிறது . 

இதனால் இந்த வழியே செல்லும் ரயில்கள் மெதுவாக சென்று வருகிறது .இதைப் பயன்படுத்தி கொள்ளைக் கும்பல் ஒன்று கடந்த வாரம் நான்கு ரயில்களில் பெண்களிடம் தங்க நகைகளை பறித்து தப்பி சென்றது .

இதனால் ரயில் பயணிகள் அச்சம் அடைந்தனர்,

 இதனையடுத்து தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு சேலம்  வந்து விசாரித்து தனிப்படை அமைத்தார்.

 இதில் தமிழக ரயில்வே காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் தமிழக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோஹித் நாதன் ராஜகோபால் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

 இவர்கள் சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள் .

இந்த நிலையில் ரயில்களில் நகை பறித்தது 4 பேர் வடநாட்டு கும்பல் என தெரியவந்து இருக்கிறது.

இவர்களில் ஒருவனது பெயர் பாலாஜி . 
இவனது கூட்டாளிகள் 
அவினேஷ் மற்றும் அமுல் ராமதாஸ் , உள்ளிட்ட 4 பேர் கும்பல் என தெரிய வந்திருக்கிறது.

 இந்த நான்கு பேரையும்  பிடிக்க இந்த நான்கு பேரின் புகைப்படங்கள் சேலம் மற்றும் ஈரோடு ரயில்வே காவலர்களுக்கு தரப்பட்டிருக்கிறது.

 இது தவிர சேலம் மற்றும் ஈரோடு ரயில் நிலையங்களில் பணியாற்றும் சுமை தூக்குபவர்கள் மற்றும் ரெயில் நிலைய  ஓட்டல்களில் பணியாற்றுபவர்களிடம் 4 பேரின் புகைப்படங்கள் வழங்கப்பட்டு கொள்ளையர்  சுற்றி திரிந்தால்  உடனே தகவல் துறை க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டும்  கொண்டுள்ளனர் .

இதுதவிர சேலம் மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் கொள்ளையர்கள் பாலாஜி ,அபினேஷ்,
அமுல் ராமதாஸ் உள்ளிட்ட 4 பேரின் புகைப்படங்கள்  அனுப்பி வைக்கப்பட்டு இவர்களை தேடுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது .

இந்த கொள்ளையர்கள் 4 பேரையும் பிடித்தால் உண்மை தெரியவரும் என கருதி உள்ள தமிழக ரயில்வே போலீசார் 4 பேரையும் எப்படியும் கைது செய்திட   தீவிர முயற்சியில் ஈடுபட்டும் இருக்கிறார்கள்.
.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.