ETV Bharat / state

சேலத்தில் புதிய கட்டுப்பாடு, இனி வாகனங்களுக்கு 5 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி - salem traffic police imposed new regulation to two and four wheelers

சேலம்: அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக வெளியே செல்லும் வாகனங்களுக்கு இனி ஐந்து நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாட்டை சேலம் மாநகர காவல்துறை விதித்துள்ளது.

சேலத்தில் புதிய கட்டுப்பாடு, இனி வாகனங்களுக்கு 5 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி

author img

By

Published : Apr 9, 2020, 3:36 PM IST

Updated : Apr 9, 2020, 5:03 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி வெளியே சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இருப்பினும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க செல்வதாகக் கூறி அதிகமான பொதுமக்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிகின்றனர்.

இதனால் கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாற வாய்ப்புள்ளது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சூழல் நிலவுவதால் இதை தடுக்கும் விதமாக சேலம் மாநகர சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு, இன்று (ஏப்ரல் 9ஆம் தேதி) முதல் மாநகர காவல்துறை சார்பில் புதிதாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இனி அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் ஐந்து நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே சென்று தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வர வேண்டும். இதை தீவிரமாக நடைமுறைப் படுத்தும் விதமாக ஒவ்வொரு நாளும் வெளியே செல்லக்கூடிய வாகனங்களின் நெம்பர் பிளேட் மீது ஒரு வண்ணம் என 5 நாள்களுக்கும் வெவ்வேறு வண்ணங்களில் அடையாளக் குறியீடு இடப்படும்.

சேலத்தில் புதிய கட்டுப்பாடு, இனி வாகனங்களுக்கு 5 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி
சேலத்தில் புதிய கட்டுப்பாடு, இனி வாகனங்களுக்கு 5 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி

அவ்வாறு அடையாளக் குறியீடு செய்யப்பட்ட வாகனம், அனுமதிக்கப்பட்ட நாளைத் தவிர மற்ற நாள்களில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டால் வாகன ஓட்டி மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என சேலம் மாநகர காவல் துறை கடுமையாக எச்சரித்து இந்த புதிய கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தியுள்ளது.

Last Updated : Apr 9, 2020, 5:03 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.