ETV Bharat / state

சேலம் வந்த ரயிலில் கட்டுக் கட்டாகப் பணம், நகைகள் பறிமுதல் - Seizure of cash and jewelery on Salem train

சேலம் வந்த ரயிலில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.11.61 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.44 லட்சம் மதிப்பிலான 880 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

salem railway police captured money in train
சேலம் ரயிலில் கட்டுக் கட்டாகப் பணம், நகைகள் பறிமுதல்
author img

By

Published : Mar 14, 2022, 6:56 AM IST

சேலம் ரயில்வே காவல்துறையினர் நேற்று சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். ரயில் கருப்பூர் அருகே வந்துகொண்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் பெட்டியில் அமர்ந்து இருந்தார். அவரிடம் ரயில்வே காவல்துறையினர் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளார்.

இதனையடுத்து அவர் வைத்திருந்த கை பையில் ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினர் திறந்து சோதனை நடத்தினர். பையின் உள்ளே முறையான ஆவணங்கள் இல்லாமல் ரூ.11,61,430 ரொக்கம் மற்றும் 880 கிராம் தங்க நகைகள் இருந்தது. இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.44 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

salem railway police captured money in train
சேலம் ரயிலில் கட்டுக் கட்டாகப் பணம், நகைகள் பறிமுதல்

இதனையடுத்து அனைத்தையும் பறிமுதல் செய்து, காவல்துறையினர் விசாரணை செய்ததில் கோவை களம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வர மூர்த்தி(27) முறையான ஆவணங்கள் இன்றி பணத்தையும் தங்க நகைகளையும் எடுத்துச் சென்றது தெரியவந்தது. மேலும்,விக்னேஸ்வர மூர்த்தியை ரயில்வே பாதுகாப்புப் படையினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

இந்தநிலையில், இவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 லட்சத்து 61 ஆயிரத்து 430 மற்றும் ரூ.44 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும் பறிமுதல் செய்து சேலம் வருமானவரி அதிகாரிகளிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் விக்னேஸ்வர மூர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னையில் பாதியிலேயே நின்ற லிப்ட்... சிக்கிய 13 பேர்...

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.