சேலம் மாவட்டம் ரயில் நிலையம் புதுப்பித்தல் பணி சுமார் ரூ.8.96 கோடி செலவில் நடந்துவருகிறது. குறிப்பாக ஐந்தாவது நடைமேடையில் நவீன நிழற்குடை அமைக்கும் பணி, நகரும் படிக்கட்டுகள், லிஃப்ட் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதனை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் நேரில் சென்று ஆய்வுமேற்கொண்டார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர், "சேலம் ரயில் நிலையம் முக்கியமான வழித்தடமாகும்.
மாற்றுத்திறனாளிகள் வசதிக்காகப் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் நீரை ரயில்வே நிர்வாகம் வெளியேற்றிவருகிறது.
முள்ளுவாடி கேட் பகுதியில் பாலம் அமைக்கும் பணி விரைவில் முடியும்" என்றார். மேலும் ஆய்வில் நிலைய மேலாளர், கோட்டப் பொறியாளர், சேலம் ரயில்வே பிரதான மேலாளர் சீனிவாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: இந்த மெட்ரோ ரயில்ல பயணம் செய்ய முடியாது... ஆனால் படிக்கலாம்!