ETV Bharat / state

தனியார் பார்சல் நிறுவனத்தில் தடைசெய்யப்பட்ட 1,500 கிலோ குட்கா பறிமுதல்

author img

By

Published : Oct 21, 2019, 9:52 AM IST

சேலம்: 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட 1,500 கிலோ புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

salem

சேலம் மாவட்டம் கோனேரிக்கரையில் உள்ள தனியார் குடோனை சித்திக், ஆரிப் என்ற இருவர் வாடகைக்கு எடுத்து நடத்திவந்தனர். இந்நிலையில், அவர்கள் நடத்தும் குடோனிற்கு உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் என்ற இடத்திலிருந்து தனியார் பார்சல் சர்வீஸ் மூலமாக தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வருவதாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையிலான காவல் துறையினர் தனியார் பார்சல் சர்வீஸ் கம்பெனியில் ஆய்வு செய்தபோது அதில் பான்மசாலா, புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து பார்சல் வந்த முகவரிக்கு சென்று காவல் துறையினர் சோதனை செய்தபோது குடோனில் மறைத்து வைக்கப்பட்ட பான்மசாலா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்

பறிமுதல் செய்யப்பட்ட 1,500 கிலோ போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிச்சிபாளையத்தில் உள்ள சித்திக் இல்லத்தில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கைப்பற்றினர்.

தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த சித்திக், ஆரிப் ஆகியோரிடமும் இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

Intro:உத்திரபிரதேசம் காசியாபாத்லிருந்து தனியார் பார்சல் சர்வீஸ் மூலம் சேலத்திற்கு வந்த 7 லட்சம் மதிப்பிலான 1,500 கிலோ தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.Body:
சேலத்தில் அடுத்தடுத்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

சேலம் கோனேரிக்கரையில் உள்ள தனியார் குடோனை சித்திக், ஆரிப் என்ற இருவர்கள் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நடத்தும் குடோனிற்கு
உத்திரபிரதேசம் மாநிலம், காசியாபாத் என்ற
இடத்திலிருந்து தனியார் பார்சல் சர்வீஸ் மூலமாக தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வருவதாக சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் பேரில் சூரமங்கலம் காவல் ஆய்வாளர் செந்தில் தலைமையிலானோர் தனியார் பார்சல் சர்வீஸ் கம்பெனிக்கு இன்று வந்த 7 பார்சலை ஆய்வு செய்த போது அதில் பான்மசாலா, புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து பார்சலில் வந்த முகவரிக்கு சென்று காவல் துறையினர் சோதனை செய்தபோது குடோனில் மறைத்து வைக்கப்பட்ட 23 பார்சலில் பான்மசாலா, புகையிலை பொருட்கள் இருந்ததை அடுத்து மொத்த பார்சலைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். இன்று பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு, 7 லட்சம் மதிப்பிலான 1500 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் கிச்சிபாளையத்தில் உள்ள சித்திக் இல்லத்தில் பதுக்கி வைத்திருந்த 5 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை உணவுப் பாதுகாப்புதுறை அலுவலர்கள் நேற்று இரவு கைப்பற்றினர். மேலும் இது தொடர்பாக சித்திக் மற்றும் ஆரிப் என்பவரை கிச்சிப்பாளையம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து உத்தரபிரதேசத்திலிருந்து சேலத்திற்கு பார்சல் மூலம் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்த சித்திக் மற்றும் ஆரிப் ஆகியோரிடம், சேலத்தில் மறைமுகமாக விற்பனை செய்ய தொடர்புடையவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் அடுத்தடுத்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி - செந்தில் (காவல் ஆய்வாளர், சூரமங்கலம் )
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.