ETV Bharat / state

கரோனாவை எதிர்கொள்ள சித்த மருத்துவத்தை நாடும் மக்கள்: நாட்டு மருந்து விற்பனையாளர்கள் மகிழ்ச்சி! - Salem people prepare Sidha

சேலம்: கரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள சித்த மருந்தை மக்கள் நாடுவதால், சித்த மருந்துகளின் விற்பனை அதிகரித்து இருப்பதாக பாரம்பரிய நாட்டு மருந்து விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கரோனாவிற்காக சித்த மருத்துவத்தை நாடும் மக்கள்: நாட்டு மருந்து விற்பனையாளர்கள் மகிழ்ச்சி!

author img

By

Published : Jul 30, 2020, 3:26 PM IST

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழலில், ஆங்கில மருந்துகளை நாடிச் சென்ற பொதுமக்கள், தற்போது, பாரம்பரிய நாட்டு மருந்துகளை வாங்கி உண்டு நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கிவருகின்றனர். அதனால் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட பாரம்பரிய மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக புதிய சித்த மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த மையத்தில் சித்த மருத்துவர் வீரபாபு மேற்பார்வையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பி உள்ளனர்.

அவரின் சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்பட்டுவரும் மூலிகை தேநீர், மூலிகை மருந்துப் பொருள்கள் விற்பனை சேலத்தில் அதிகரித்து உள்ளது.

அதன்படி சித்த மருத்துவர் வீரபாபு பரிந்துரைத்துள்ள மூலிகை பொருள்களான சுக்கு, அதிமதுரம், சித்தரத்தை, கடுக்காய் தோல், மஞ்சள், திப்பிலி, ஓமம், கிராம்பு, மிளகு ஆகிய மருந்துப் பொருள்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து மூலிகை தேநீர் பெட்டகமாக ரூபாய் 120க்கு சேலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த மூலிகை பொருள்கள் விற்பனை கடந்த ஒரு மாத காலமாக சூடு பிடித்துள்ளது. தினம்தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் சின்னக்கடை வீதி நாட்டு மருந்து கடைகளில் நீண்ட வரிசையில் நின்று தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து வாங்கிச் சென்று பயனடைகின்றனர்.

சேலம் மாநகரில் உள்ள சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு மருந்து கடைகள் நிறைய உள்ளன. எப்போதுமே இந்தக் கடைகளில் குறைந்த அளவே வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக்கும். ஆனால் தற்போது கரோனாவிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாட்டு மருந்துகளை வாங்கி உண்ணும் ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. இதனால் சித்தா, நாட்டு மருந்துகள் நல்ல விற்பனை ஆவதாக மூலிகை மருந்து விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேட்டியளித்த சின்னக்கடை வீதியில் நாட்டு மருந்து கடை நடத்திவரும் சீனிவாசன் கூறுகையில், "பாரம்பரியமாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாங்கள் நாட்டு மருந்துகடை, சின்னக்கடை வீதியில் நடத்திவருகிறோம். ஆனால் முந்தைய காலங்களை விட தற்போது நாட்டு மருந்து மீது பொதுமக்களுக்கு அதிக அளவில் ஆர்வம் வந்துள்ளதை பார்க்கிறோம்.

கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமலிருக்க நோய் எதிர்ப்பு சக்தியை ஒவ்வொருவரும் தங்களது உடலில் அதிகரித்துக் கொள்வது அவசியம் என்பதை பொதுமக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருந்துகள் பயன்படும் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர், மூலிகை தேநீர் ஆகியவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது” என்றார்.

இதையும் படிங்க...புதிய கல்விக் கொள்கை: தமிழ்நாடு அரசுக்கு தகவல் வரவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.