சேலம்: வெள்ளக்கல்பட்டி அடுத்த உடைந்த பாலம் பகுதியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவருகின்றனர். இந்நிலையில் இந்த இடம் வனத் துறைக்குச் சொந்தமானது என்று கூறி, அங்கு வசிப்போர் வீட்டை காலி செய்யுமாறு சேலம் மாவட்ட வனத் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு, எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி மக்கள் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இன்று (ஜூலை 31) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு கலைந்துசென்றனர்.