சேலம் அஸ்தம்பட்டி அருகே சின்ன திருப்பதி பகுதியில் கேசவன் என்பவர் பெயிண்ட் கடை நடத்திவருகின்றார். இந்தநிலையில் கடையில் பெயிண்ட் கலக்கும் இரண்டு இயந்திரங்களில் இன்று மாலை 7 மணி அளவில் கடை ஊழியர்கள் வெங்கடேசன், மணிகண்டன் ஆகியோர் பெயிண்ட் கலர் மாற்றுவதற்காக அதனை பயன்படுத்தியப்போது எதிர்பாராத விதமாக இயந்திரம் திடீரென தீப்பற்றியது.
இந்த தீ மளமளவென கடை முழுவதும் பரவி கடைக்குள் இருந்த ரூ. 8 லட்சம் மதிப்பிலான பெயிண்ட்கள் முழுவதும் தீயில் எரிந்து நாசமாயின தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை முழுவதும் அணைத்தனர்.
இந்த தீ விபத்தினால் பெயிண்ட் கடை அருகில் உள்ள டீக்கடை, அழகு சாதன கடை பாதிப்புக்குள்ளாயின தீயை அணைக்க முயன்றபோது பெயிண்ட் கடையில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தீ விபத்து குறித்து கன்னங்குறிச்சி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.
இதையும் படிங்க: திருவல்லிக்கேணியில் மின்கசிவால் வீட்டில் தீ விபத்து..!