ETV Bharat / state

பயன்பாட்டிற்கு வர தயராகும் சேலம் 'இரட்டை அடுக்கு பாலம்'!

சேலம்: ஐந்து ரோடு பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

File pic
author img

By

Published : May 13, 2019, 9:56 PM IST

சேலம் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டுவர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இதில், ஏவிஆர் ரவுண்டானா, திருவாக் கவுண்டனூர் ரவுண்டானா, இரும்பாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ரூ. 125 கோடியில் புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, சேலம் மாநகர் பகுதியில் உள்ள நான்கு ரோட்டிலும், ஐந்து ரோடு பகுதியிலும் பிரமாண்டமான புதிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பாலம் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக இரட்டை அடுக்கு மேம்பாலமாக உருவாக்கப்பட்டுவருகிறது.

இரட்டை அடுக்கு பாலம்

இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், 'மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, இரண்டொரு நாட்களில் ஐந்து ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அஸ்தம்பட்டி வரையிலான மேம்பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்தனர்.

Intro:சேலம் ஐந்து ரோடு பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்று மாநில நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Body:சேலம் மாநகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை துரிதகதியில் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர் பகுதியில் உள்ள 4 ரோட்டிலும் 5 ரோடு பகுதியிலும் பிரமாண்டமான புதிய மேம் பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன .

இதில் , ஏவிஆர் ரவுண்டான , திருவாக் கவுண்டனூர் ரவுண்டானா, இரும்பாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ரூ. 125 கோடியில் புதிய மேம் பாலங்கள் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தற்போது அந்தப் பகுதி வழியாக கோயம்புத்தூர், மதுரை, தர்மபுரி, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் கார்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி எளிதாக சென்று வர முடிகிறது. அதேபோல சேலம் நகரத்தின் உள் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் தினமும் அதிகரித்து வருவதை சமாளிக்க , தமிழக அரசு 4 ரோடு மற்றும் 5 ரோடு பகுதியில் மேம்பாலம் கட்டி வருகிறது. மேம்பாலம் கட்டும் பணி களில் முன்னணி தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டு உள்ளது.

ஐந்து ரோடு பகுதியில் இருந்தும் அஸ்தம்பட்டி வரையில் செல்லும் சுமார் 8 கிலோமீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் தற்போது கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. ஏவிஆர் ரவுண்டானா தொடங்கி, அஸ்தம்பட்டி வரையில் உள்ள இந்த உயர் மட்ட மேம்பாலமும், 4 ரோடு பகுதியில் உள்ள அண்ணா பூங்கா வரை கட்டப்பட்டு வரும் மேம்பாலமும் ரூ.320கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.மேலும் இந்தப் பாலம் தமிழ் நாட்டிலேயே முதல்முறையாக இரட்டை அடுக்கு மேம்பாலமாக உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது துரித கதியில் பணிகள் நடந்து வரும் இந்த இரண்டு உயர்மட்ட பாலங்களில், முதலாவதாக ஏவிஆர் ரவுண்டானா முதல் அஸ்தம்பட்டி வரையிலான மேம்பாலம், இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் தெரிகிறது.

Conclusion:இதுதொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கேட்டபொழுது, 'மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு, இரண்டொரு நாட்களில் ஐந்து ரோடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் அஸ்தம்பட்டி வரையிலான மேம்பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன' என்று தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.