தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிவன் கோயில்களில் நேற்று இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல சேலம் டவுன் பகுதியில் உள்ள சனீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடந்தது.
அப்போது, சனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நடராஜருக்கு பால், இளநீர், பன்னீர், சந்தனம், குங்குமம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வணங்கி சென்றனர்.
மேலும், சேலம் உத்தம சோழபுரம் கரபுரநாதர் ஆலயம், வேலூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம், தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயம், ஆறகளூரில் உள்ள சிவன் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையும் படிங்க: நடராஜரின் ஆருத்ரா தரிசனம் - பாரம்பரிய அர்ச்சகர்கள் வெளியேற்றம்