சேலம் அடுத்த விநாயகம்பட்டி பகுதியில் தனியார் குடோன் இயங்கிவருகிறது. இதில் ஊழியராகப் பணிபுரிந்த மல்லூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கோகுலக்கண்ணன் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோகுலக்கண்ணன் கடந்த சில மாதங்களாக விநாயகம்பட்டி தனியார் குடோனில் ஊழியராகப் பணிபுரிந்துவந்தார். அவரின் உறவினர்கள் நேற்று மாலை செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால், அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விநாயகம்பட்டி குடோனுக்கு நேரில் வந்து பார்த்துள்ளனர்.
அப்போது கோகுலக் கண்ணனின் கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து கன்னங்குறிச்சி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த கன்னங்குறிச்சி காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: