ETV Bharat / state

சேலம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க எம்.பி. பார்த்திபன் வலியுறுத்தல்! - salem mp parthiban request to Farmers relief fund

சேலம்: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மலர் சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சேலம் மக்களவை உறுப்பினர் பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மக்களவை உறுப்பினர் பார்த்திபன் வலியுறுத்தல்!

author img

By

Published : Apr 7, 2020, 10:53 AM IST

கரோனோ வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒருபுறம் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுக்கப்பட்டாலும், மறுபுறம் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பயிரிடப்பட்ட மலர்கள் விற்பனைக்கு போகாமல் அப்படியே உள்ளது. இதனால் மலர் சாகுபடி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி, வருமானம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து சேலம் மக்களவை உறுப்பினர் பார்த்திபன், அம்மாவட்ட ஆட்சியர் ராமனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

சேலம் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க மக்களவை உறுப்பினர் பார்த்திபன் வலியுறுத்தல்!

இது குறித்து பார்த்திபன் கூறுகையில், “சேலம் மாவட்டத்தில் உள்ள மலர் சாகுபடி விவசாயிகள் 144 தடை உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி ஒருபக்கம், தடை உத்தரவு ஒருபக்கம் என்று விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக முடங்கிப்போயுள்ளது. எனவே பனமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மலர் சாகுபடி செய்து வருமானமின்றி தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.