சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடியாகும். அணைக்கு நேற்று (செப். 14) வினாடிக்கு எட்டு ஆயிரத்து 608 கனஅடி நீர் வந்தது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி 8 ஆயிரத்து 622 கன அடியாக நீர் உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில், சம்பா நெல் சாகுபடி தொடங்கியதால் நீர் தேவை அதிகரித்து உள்ளது.
இதனையடுத்து வினாடிக்கு ஆறு ஆயிரம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணை டெல்டா நீர் திறப்பு தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 92.37 அடியாக இருந்தது. இன்று காலை சற்று குறைந்து 92.00 அடியாக உள்ளது. அணையில் நீர் இருப்பு 55.96 டி.எம்.சி.யாக உள்ளது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 622 கன அடியாக அதிகரித்து உள்ளது. இதற்கிடையில், மேட்டூர் அணை பகுதியில் மழை அளவு 6.80 மி.மீ.ஆக பதிவாகியுள்ளது.