ETV Bharat / state

சேலம் மசாஜ் சென்டர் வங்கதேச அழகி கொலை வழக்கு; கணவரிடம் உடல் ஒப்படைப்பு - கணவரிடம் உடல் ஒப்படைப்பு

சேலம் மசாஜ் சென்டரில் கொலை செய்யப்பட்ட வங்கதேச அழகியின் உடல் 8 மாதத்திற்கு பின்னர் அவரது கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சேலம் மசாஜ் சென்டர் பங்களாதேஷ் அழகி கொலை வழக்கு; கணவரிடம் உடல் ஒப்படைப்பு

author img

By

Published : Aug 3, 2022, 6:20 AM IST

சேலம்: மாநகராட்சி வின்சென்ட் பகுதியில் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் நடேசன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு பங்களாதேஷைச் சேர்ந்த தேஜ் மேண்டல் என்பவர் (வயது 29) வசித்து வந்தார். இவரும், பங்களாதேசத்தை சேர்ந்த பெண்கள் சிலரும் சேலம் காந்தி ரோடு உள்ளிட்ட மூன்று இடங்களில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தனர்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி தேஜ் மேண்டல் அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு சடலம் சூட்கேசில் அடைக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. துர்நாற்றம் வீசியதால் தேஜ்மேண்டல் வீட்டிற்கு அருகில் வச்சிபவர்கள் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தேஜ்மேண்டல் கொலை செய்யப்பட்டு சடலம் சூட்கேசில் வைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

தேஜ்மேண்டலுடன் தங்கி இருந்த சிலர் தப்பி ஓடியதும் தெரியவந்தது. அப்போது தேஜ்மேண்டல் வீட்டில் அவர் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடு, போயிருந்தது. இதன் பின்னர் சடலம் எடுத்துச் செல்லப்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.

இந்த கொலை குறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா தனிப்படை அமைத்தார். ஆனால் கொலையாளிகளை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

வங்கதேசத்தை சேர்ந்த பப்லு மற்றும் ரிவி ஆகியோர் கொலையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இவர்களை கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதனையடுத்து சேலம் அஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பால்ராஜ் மற்றும் தனிப்படை போலீசார் பங்களாதேஷ் சில் வசிக்கும் தேஜ்மேன் டலின் கணவர் முகமது ராக்கியை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது முகமது ராக்கி தனக்கும் , தேஜ்மேன்டலுக்கும் 2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது என்றும், தங்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது என்றும், குழந்தை பிறந்த சில மாதங்களில் தங்களை விட்டு தேஜ்மேண்டல் இந்தியாவிற்கு வந்து விட்டதாகவும், பிறகு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் சடலத்தை அடையாளம் காண்பித்து தேஜ்மேன்டலின் சடலத்தை பெற்று செல்லுமாறும், பாஸ்போர்ட் செலவிற்கு பணம் வழங்குவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட முகமது ராக்கி நேற்று சேலம் வந்தார். பிறகு அவரிடம் அஸ்தம்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். இதன் பிறகு சேலம் அரசு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று தேஜ்மேண்டல் சடலத்தை அடையாளம் காண்பிக்க கூறினர் தேஜ்மேண்டலுக்கு ஒரு கால் சற்று ஊனமாக இருக்கும்.

இதை வைத்து அவர் அடையாளம் காண்பித்தார். இதன் பின்னர் நேற்று பிற்பகலில் சடலத்தை கணவர் முகமது ராக்கி மற்றும் சமூக ஆர்வலர்கள் எடுத்து சென்று சேலம் டவுன் பகுதியில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

இதையும் படிங்க: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக மீண்டும் தண்ணீர் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.