மாநிலத்தில் சென்னை உள்ளிட்ட கரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில் தற்போது சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.
மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 295 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக சேலம் மாநகராட்சி பகுதியில் 172 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்து 766 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளது.
மீதமுள்ள ஆயிரத்து 974 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 85 பேர் உயிரிழந்துள்ளனர்.