ETV Bharat / state

ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி! - mettur

சேலம்: மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.

ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!!
author img

By

Published : Jul 11, 2019, 4:39 PM IST

சேலம் மாவட்டம் மேட்டூர் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தானம் என்பவரின் மனைவி அகல்யா. இவர்களுடைய ஒரே மகளான காயத்ரி, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்துகொண்டார்.

ஒரே மகள் இப்படிச் செய்துவிட்டாளே என்ற கோபத்தில், அவருடைய தந்தை காயத்ரியை இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தாய் சமாதானமாகிவிட்ட போதிலும், கணவர் ஏற்றுக் கொள்ளாததால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அகல்யா நேற்று மாலை நெத்திமேடு பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு தனியார் பேருந்தில் சென்றுவிட்டு வீடு திருப்பும்போது, தமது மகள் வசிக்கும் குள்ளமுடையானூர் பெயர் பலகையைப் பார்த்துள்ளார்.

ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!!

அப்போது கையில் வைத்திருந்த பேனாக்கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டார். அவரின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதனைக் கண்ட பயணிகள் பயத்தில் அலறினர். உடனடியாக அவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:சேலம் மாவட்டம் , மேட்டூர் அருகே ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் பேனாக்கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தது.Body:

மேட்டூர் தொழிலாளர் இல்லம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தானம் - அகல்யா தம்பதியர். இவர்களுடைய ஒரே மகளான காயத்ரி, வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஒரே மகள் இப்படி செய்து விட்டாளே என்ற கோபத்தில், அவருடைய தந்தை காயத்ரியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. தாய் அகல்யா சமாதானம் ஆகி விட்ட போதிலும், கணவர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் தவித்த அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை நெத்திமேடு பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு தனியார் பேருந்தில் சென்ற அகல்யா, தமது மகள் வசிக்கும் குள்ளமுடையானூர் பெயர் பலகையை, பார்த்துள்ளார்.

அப்போது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துக் கொண்டார். அவரின் கழுத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதனைக் கண்ட பயணிகள் பயத்தில் அலறினர்.
Conclusion:
உடனடியாக அவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து கருமலைக் கூடல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.