சேலத்தில் முக்கியப் பொழுதுபோக்கு சுற்றுலாத் தலமாக விளங்குவது குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா. ஏற்காடு மலை அடிவாரத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது. இங்கு முதலை, மயில், வெள்ளை மயில், கடமான், புள்ளிமான், வெளிநாட்டு பட்டாம்பூச்சிகள் என பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன.
இந்நிலையில் நேற்று (ஜன.17) காணும் பொங்கலை முன்னிட்டு குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இங்குள்ள விலங்குகளுடன் ஆர்வமாகச் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். பூங்காவில் குழந்தைகள் ஆர்வத்துடன் விளையாடி உற்சாகமாக காணும் பொங்கலைக் கொண்டாடினர்.
பட்டாம்பூச்சிக்கு என அமைக்கப்பட்டுள்ள தனிப்பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்து, பட்டாம்பூச்சிகளுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். காணும் பொங்கல் திருநாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வன உயிரியல் பூங்காவில் வருகைதந்தார்கள் என்று உயிரியல் பூங்கா வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காணும் பொங்கல்: உதகையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்