சேலத்தில் பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலை துறை சார்பில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் குறித்து இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், திருத்தொண்டர் சபை நிர்வாகிகள் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது இடிந்து விழும் நிலையில் உள்ள மதில் சுவர்கள், கோயிலுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, வணிக கடைகளில் அருகில் அமைக்கப்பட்டுள்ள இடங்களை அகற்றவும் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட செய்ய இடர்பாடுகள் இல்லாமல் வழிவகை செய்ய வேண்டும் என அலுவலர்கள் திருத்தொண்டர் சபை நிர்வாகிகள் வலியுறுத்தினர்.