சேலம் மாவட்டத்தில், கரோனா தொற்று பாதித்த நிலையில் 35 பேர், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இவர்களில் நேற்றுவரை 33 பேர் சிகிச்சைப் பெற்று குணமடைந்து படிப்படியாக வீடு திரும்பினர் .
இந்நிலையில், கெங்கவல்லியைச் சேர்ந்த ஒருவரும், தொளசம்பட்டியைச் சேர்ந்த ஒருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களோடு தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டைச் சேர்ந்த ஒருவரும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இவர்களை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், அரசு மருத்துவமனை டீன் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் ஆகியோர் வாழ்த்துகூறி, வழியனுப்பி வைத்தனர் .
மேலும் வீட்டுக்குச் சென்றதும் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறும், கட்டாயம் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்றும், சமூக இடைவெளிவிட்டு இருக்குமாறும் மருத்துவர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தினர்.
தற்போது கரோனோ வைரஸ் நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த 35 பேரும் குணமடைந்து அவரவர் வீடுகளுக்குத் திரும்பியதால், சேலம் மாவட்டமானது கரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளின் தேர்வு மையங்கள் கணக்கெடுக்கும் பணி