சென்னை தியாகராய நகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தை தவறாகச் சித்திரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் - தங்கள் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தை தவறாகச் சித்திரித்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் நல்லகண்ணுவை சமூக வலைதளங்களில் ஆபாசமாகப் பதிவிட்டவர்களைக் கைதுசெய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டத் தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: உயர் நீதிமன்றக் கிளை கேள்வி?