புதிதாக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாட்டில் காங்கேயம் வரை 1,860 கி.மீ தொலைவிற்கு, மின் தடம் மூலம் மின் டவர் 6,000 மெகாவாட் மின்சாரம் 800 கி.வாட்ஸ் ஐ வோட்டேச் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று எடப்பாடி அருகே செட்டி மாங்குறிச்சி கிராமதைச் சேர்ந்த பொன்னுசாமி, அர்த்தணாரி ஆகிய இரு விவசாயிகளின் நிலத்தில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், தங்களுக்கு வழங்கும் இழப்பீட்டு தொகை குறைவாக, அதிகப்படுத்தி தரவேண்டும் என்று கூறி இரு விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து இன்று நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்போடு, சங்ககிரி கோட்டாட்சியர் அமர்தலிங்கம், எடப்பாடி வட்டாட்சியர் கோவிந்தராஜ், எடப்பாடி காவல் ஆய்வாளர் செந்தில், பவர் கிரிட் மேலாளர் பாஸ்கரன் ஆகியோரின் மேற்பார்வையில் மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற தொடங்கியது.
அப்போது விவசாயிகளின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர் உங்கள் நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்தன் பேரில் விவசாயிகள் எதிர்ப்பை விலக்கிக் கொண்டு மின் கோபுரம் அமைக்க வழிவிட்டனர்.
இதையும் படிங்க: செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!