நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் தேர்தலுக்காக பணம் விநியோகத்தைத் தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்படும் பணம், தங்கம் உள்ளிட்டப் பொருள்களை பறிமுல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம் இரும்பாலைப் பிரிவு சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாபுகுமார் தலைமையிலான குழுவினர் இன்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது,ஜலகண்டாபுரத்தில் இருந்து நெத்திமேடுக்கு உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட மூன்று லட்சம் மதிப்பிலான 250 அபூர்வா பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பறிமுதல் செய்த பட்டுப் புடவைகளை சேலம் மேற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாரதா ருக்குமணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.