2019 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்நாட்டில் 18 தொகுதிகளுக்கு நடக்கவுள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில்வாக்காளர்களுக்கு பணம், இலவசப்பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கும் வகையில் அந்தந்தத் தொகுதிவாரியாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்தவகையில்,சேலம் ராமகிருஷ்ணா பிரதான சாலையில் சாமிநாதன் தலைமையில் தேர்தல் நிலைக்குழுவினர்தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாகவந்த காரை சோதனை செய்ததில்,அதில் நான்கு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, தேர்தல் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், காரை ஓட்டிவந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கரிஸ் குப்தா என்பதும், உரிய ஆவணங்களின்றி அப்பணம் கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் நிலைக்குழுவினர், சேலம் வடக்கு தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் ஒப்படைத்தனர்.