ETV Bharat / state

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு...திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை - தாழையூர் விவசாயி தங்கவேல்

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 85 வயது திமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 26, 2022, 12:36 PM IST

Updated : Nov 26, 2022, 2:43 PM IST

சேலம்: மேட்டூர் அடுத்த பி. என். பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு தாழையூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (85). இவர் நங்கவள்ளி திமுக முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளராக பொறுப்பு வகித்துள்ளார்.

இவருக்கு திருமணம் ஆகி ஜானகி என்ற மனைவியும், மணி, ரத்னவேல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் திமுக மீது கொண்ட பற்றின் காரணமாக கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார்.

மேலும் திமுக எதிர்க் கட்சியாக இருந்த போது பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கையால் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் இந்தி திணிப்பை கையில் எடுத்துள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கவேல் பி. என் .பட்டி பேரூராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு தாழையூர் திமுக கட்சி அலுவலகத்தில், இன்று 11 மணி அளவில் , கேனில் பெட்ரோல் வாங்கி வந்து உடலில் ஊற்றி தீ பற்ற வைத்துக் கொண்டார். இதனையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு...திமுக நிர்வாகி தீக்குளித்து மரணம்

மேலும் தீப்பற்ற வைக்கும் முன்பு ஒரு வெள்ளைத் தாளில் வாசகம் ஒன்று எழுதியுள்ளார் . அதில் ' மோடி அரசே மத்திய அரசே அவசர இந்தி வேண்டாம், தாய்மொழி தமிழ் இருக்க இந்தி கோமாளி எதுக்கு , இந்தி எழுத்து மாணவ மாணவிகள் வாழ்க்கையை பாதிக்கும் இந்தி ஒழிக இந்தி ஒழிக' என்ற வாசகத்தை எழுதி வைத்துள்ளார்.

Last Updated : Nov 26, 2022, 2:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.