ETV Bharat / state

'அரசு கட்டடங்களுக்கு உலர் சாம்பல் கற்களையே பயன்படுத்த அரசாணை வேண்டும்" - உலர் சாம்பல் கல் சங்கத்தினர் கோரிக்கை!

Dry ash manufacturer: புதிதாக கட்டப்படும் அரசு கட்டடங்களுக்கு உலர் சாம்பல் கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசு ஆணை வெளியிட வேண்டும் என்று சேலம் மாவட்ட உள்ளூர் சாம்பல் கற்கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

dry ash manufacturer
உலர் சாம்பல் கல் சங்கத்தினர் கோரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 10:00 AM IST

'அரசு கட்டடங்களுக்கு உலர் சாம்பல் கற்களையே பயன்படுத்த அரசாணை வேண்டும்" - உலர் சாம்பல் கல் சங்கத்தினர் கோரிக்கை!

சேலம்: தமிழ்நாட்டில் கட்டட தொழிலில் செங்கல் பயன்பாட்டிற்குப் பதிலாக தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலர் சாம்பல் கற்கள் உற்பத்தி தொழிலைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட உலர் சாம்பல் கற்கள் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட உலர் சாம்பல் கற்கள் உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் 200க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், உலர் சாம்பல் கற்கள் உற்பத்தி தொழிலில் உள்ள சிரமங்கள் குறித்தும், அவற்றின் தேவைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும் ஒரு உலர் சாம்பல் கல்லின் குறைந்தபட்ச ஆதார விலை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னர், உலர் சாம்பல் உற்பத்தியாளர்களின் பிரதிநிதி நடராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் மட்டும் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட உலர் சாம்பல் உற்பத்தி செய்யும் தொழில் கூடங்கள் இயங்கி வருகின்றன.

சிறியதும் பெரியதுமாக இயங்கி வரும் இந்த உலர் சாம்பல் கல் உற்பத்தி தொழிலில் ஏற்படும் சிரமங்கள், இந்த தொழிலின் தேவைகள் குறித்தும் நாங்கள் விரிவாக கலந்து ஆலோசித்தோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக, தற்போது உலர் சாம்பல் மூலம் தயாரிக்கப்படும் ஒரு கல்லின் விலை குறைந்தபட்சம் 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல சேலம் மாநகராட்சிப் பள்ளிக்குள் ஒரு கல்லின் விலை 6 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக ஏகமனதாக நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கு வாடிக்கையாளர்கள் உரிய ஆதரவை அளித்து உதவிட வேண்டுகிறோம். மேலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திடம் இருந்தும், சேலம் மேட்டூர் அனல் மின் நிலையத்திலிருந்தும், உலர் சாம்பல் பெறுவதில் எங்களுக்கு பெரும் சிக்கல்கள் எழுந்துள்ளன.

அதனை களைந்து, மானிய விலையில் மத்திய மாநில அரசுகள் உலர் சாம்பலை எங்களுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மேலும், உலர் சாம்பல் தரத்தை மேம்படுத்திட வேண்டும். மாதம் 500 யூனிட் மின்சாரம் உலர் சாம்பல் கற்கள் உற்பத்தி செய்வோருக்கு இலவசமாக அரசு வழங்க வேண்டும்.

சிமெண்ட் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்திட வேண்டும். தரமான சுண்ணாம்பு பெறுவது, ஆய்வகத்தில் பரிசோதித்து உறுதி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து அரசு புதிய கட்டடங்களுக்கும் உலர் சாம்பல் கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அரசாணை வெளியிடப்பட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்ரீவில்லிபுத்தூரில் 550 ஆண்டுகள் பழமையான பாணர் சதிக்கல் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.