ETV Bharat / state

நிலத்தடி நீரைத் திருடினால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் ரோகிணி

சேலம்: நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ரோகிணி எச்சரித்துள்ளார்.

ரோகிணி
author img

By

Published : May 27, 2019, 1:34 PM IST

மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , பொது மக்களின் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ரோகிணி இன்று நேரில் பெற்றார். மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் ஆகியோரிடம் நேரடியாக மனுக்களை பெற்ற ரோகிணி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சேலம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மண்டலம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ரோகிணி பேட்டி

மேலும், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்யப்படுவது குறித்து புகார்கள் வருகின்றன. இந்தப் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்ததை அடுத்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய ரோகிணி, வறட்சியான இந்தக் காலத்தில் பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின் இணைப்பில் தடை ஏற்பட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே பல துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, குழு அமைக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Intro:நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

Body: மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்ட நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியர் ரோகிணி இன்று நேரில் பெற்றார்.

மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் ஆகியோரிடம் நேரடியாக மனுக்களை பெற்ற ஆட்சியர் ரோகிணி, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் .

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," சேலம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது .

மண்டலம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்யப்படுவது குறித்து புகார்கள் வருகின்றன.

இந்தப் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்ததை அடுத்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வறட்சியான இந்தக் காலத்தில் பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின் இணைப்பில் தடை ஏற்பட்டால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே பல் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து , குழு அமைக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

பிளாஸ்டிக் தடையை மீறி ஓர் மீதும் நடவடிக்கை கடுமையாக்கப் பட உள்ளது . பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர் மீதும், அவற்றை கடைகளில் வைத்து விற்போர் மீதும் நடவடிக்கை தீவிரமாக்கப்படும். பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். " என்று தெரிவித்தார்.

Conclusion:மேலும் ஆட்சியர் ரோகிணி கூறுகையில், " ஏற்காடு கோடை விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன . பள்ளி விடுமுறை முடிவதற்கு முன்பாகவே கோடை விழா தொடங்கும் " என்றும் அவர் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.