ETV Bharat / state

சேலத்தில் லியோ பட காட்சிகளுக்கு கட்டுப்பாடு - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்! - லியோ படம்

Leo movie restriction: அக்டோபர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை, லியோ திரைப்படத்திற்கு ஒரு நாளுக்கு 5 காட்சிகள் மட்டும் திரையிட வேண்டும் என சேலம் ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Lio movie restriction
லியோ திரைப்படம் ஒரு நாளுக்கு 5 காட்சிகள் மட்டுமே அனுமதி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 9:38 AM IST

சேலம்: சேலம் மாவட்டத்தில் "லியோ" திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அக்.19 முதல் அக்.24 வரையிலான நாட்களில், ஒரு நாளுக்கு அதிகபட்சமாக 5 காட்சிகள் மட்டும் திரையிட அனுமதிக்கப்படுகிறது என ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள சினிமா திரையரங்குகளில் "லியோ" திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி அக்.19 முதல் அக்.24 வரை நடத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் "லியோ" திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அக்.19 முதல் அக்.24 வரை ஒரு நாளில் அதிகபட்சம் 5 காட்சிகள் திரையிட அனுமதிக்கப்படுகிறது.

காலை 9 மணி முதல் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்குள் முடிவடையும் வகையில் திரையிட வேண்டும். அதிகாலை 1.30 மணி முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியும் திரையரங்குகளில் திரையிடக்கூடாது. மேலும், திரைப்படத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்கவும், விதிமுறை மீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சேலம் வருவாய் கோட்டாட்சியரை 94450 00433 என்ற கைப்பேசி எண்ணிலும், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் 94450 00434 என்ற கைப்பேசி எண்ணிலும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியரை 94450 00436 என்ற கைப்பேசி எண்ணிலும், மேட்டூர் வருவாய் கோட்டாட்சியரை 94450 00435 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

திரையரங்குகளில் சுகாதாரம், பாதுகாப்பு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். பார்வையாளர்கள் சிரமமின்றி வந்து செல்ல, சரியான இருக்கை வசதிகள், வாகன நிறுத்த நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்டு வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் சொன்னதென்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.