ETV Bharat / state

டெங்கு காய்ச்சலா, கொரோனா வைரஸா? - சேலத்தில் இளைஞருக்கு தீவிர சிகிச்சை - Salem youth Intensive care

சேலம்: அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இளைஞருக்கு கொரோனா வைரஸ் இல்லை எனவும்; டெங்கு காய்ச்சல்தான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞருக்கு தீவிர சிகிச்சை
இளைஞருக்கு தீவிர சிகிச்சை
author img

By

Published : Mar 10, 2020, 7:19 PM IST

Updated : Mar 11, 2020, 12:07 AM IST

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சையது உசேன். இவர் பெங்களூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் இன்ஜினியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு தொடர்ந்து காய்ச்சல், இருமல் பாதிப்பு இருந்துள்ளது. இதனையடுத்து பெங்களூருவிலிருந்து சேலம் வந்த சையது உசேன் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

பின்னர் அங்கு சிகிச்சைப் பலன் அளிக்கவில்லை என்பதை அறிந்த அவரின் பெற்றோர்கள் சையது உசேனை, சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அப்போது அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சையது உசேனுக்கு வைரஸ் தொற்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதனை அறிந்த சிலர் சையது உசேனுக்கு கொரோனா வைரஸ் என சமூகவலைதளத்தில் தகவல்களைப் பரப்பினர்.

இதுகுறித்து சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனை டீன் பாலாஜிநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சையது உசேன் என்னும் இளைஞருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தான் கண்டறியப்பட்டுள்ளது. அவரின் ரத்த மாதிரிகள் தற்போது சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முழுமையான முடிவு தெரிந்த பிறகே, அவரை பாதித்த நோய் என்னவென்று கண்டறிய இயலும்.

ஆனாலும் தற்சமயம் அவரின் ரத்தத்தில் தட்டணுக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், டெங்கு காய்ச்சலுக்கு வழங்க வேண்டிய சிகிச்சையை மருத்துவமனை வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று அவருக்கு இல்லை" என்று கூறினார்.

இளைஞருக்கு தீவிர சிகிச்சை

இதையும் படிங்க: மதுரையில் கொரோனா பாதிப்பு இல்லை - மாவட்ட ஆட்சியர் வினய் பேட்டி

Last Updated : Mar 11, 2020, 12:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.