கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுக்கும்விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி, ஜலகண்டபுரம், ஆத்தூர், வாழப்பாடி, மேச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உயர் நீதிமன்ற உத்தரவுபடி சிறு, குறு கரும்பு விவசாயிகளுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் என்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய 105 கோடி ரூபாய் 16 மாதங்களாக இன்னும் வழங்கப்படவில்லை என்றும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பிரச்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பணத்தினை பெற்று தர வேண்டும், அனைத்து விவசாய கடன்களையும் ஒரு ஆண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும்.
ஊரடங்கு காலத்தில் பழங்கள், பூக்கள் உள்ளிட்ட வேளாண் உற்பத்திப் பொருள்கள் நாசமாகியுள்ளன. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க... விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கவில்லை என்றால் போராட்டம் - அய்யாக்கண்ணு!