ETV Bharat / state

சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கிய சேலம் நீதிமன்றம்! - life sentence

Salem Court: சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை, தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 19, 2023, 11:08 PM IST

சேலம்: சங்ககிரி அடுத்த கனககிரி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் இவருக்கு அந்த பகுதியில் இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் வாடகைக்கு தனியார் செருப்பு கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதற்காக வடமாநிலத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் அந்த இடத்திலேயே தகரத்தினால ஆன கொட்டகை அமைத்து, இரண்டு அல்லது மூன்று பேராக தங்கி இருந்துள்ளனர். அவ்வாறு பீகார் மாநிலம் புல்வாரியா கிழக்கு பகுதியை சேர்ந்த முகமது நஸ்ருதீன், பீகார் நாராயணபுரம் சகோரியா பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் ரிஸ்தேவ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அமித்குமார் ஆகிய மூன்று பேரும் ஒரே இடத்தில் தங்கி இருந்துள்ளனர்.

அவர்கள் மூன்று பேரில் ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொருவர் மாறி மாறி சமைக்க வேண்டும் என முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் முகமது நஸ்ருதீன் சமைக்காமல் மற்ற இருவரையும் சமையல் செய்யும்படி கூறியதோடு, அவர்கள் செய்யும் சாப்பாட்டில் தினமும் குறை கூறியதாகவும் தெரியவந்தது.

அதனால் ஆத்திரமடைந்த ஜெயக்குமார் மற்றும் அமித் குமார் ஆகியோர், கடந்த் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி, முகமது நஸ்ருதீன் கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கி இருந்த கொட்டகைக்குள் முகமது நஸ்ருதீன் இறந்து கிடந்தை கண்டவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

அத்தகவலின் அடிப்படையில் மகுடஞ்சாவடி போலீசார் உடலை கைப்பற்றி, முகமது நஸ்ருதீனுடன் தங்கியிருந்த இரண்டு வட மாநில இளைஞர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஜெயக்குமார் ரிஸ்தேவ் மற்றும் அமித்குமார் மது போதையில் முகமது நசிருதீன் கழுத்தை துண்டால் நெறித்து கொலை செய்தது போலீஸ் விசாரணை தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு சேலம் முதலாவது கூடுதல் அமர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று (அக்.19) வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், ஜெயக்குமார் ரிஸ்தேவ் மற்றும் அமித்குமார் ஆகிய இருவருக்கும், ஆயுள் தண்டனை மற்றும் இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: ஈரோடு அருகே 50 கிலோ கஞ்சா பறிமுதல் - அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் நடவடிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.