ETV Bharat / state

மனிதக் கழிவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு சமையல் கூடம் ஆய்வு

சேலம்: மனிதக் கழிவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமையல் கூடத்தை மாநகராட்சி ஆணையர் சதீஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆய்வு
author img

By

Published : Nov 24, 2019, 1:30 AM IST

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் மனிதக் கழிவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமையல் கூடத்தை மாநகராட்சி ஆணையர் சதீஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூடத்தையும் பார்வையிட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'மனிதக் கழிவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமையல் கூடத்தை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த சமையல் கூடத்தில் சமைக்கின்ற வகையில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் ஆய்வு
இதையும் படிங்க: கோவை அரசு மருத்துவமனையை ஆட்சியர் ஆய்வு!

Intro:

மனித கழிவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயு மூலம் செயல்படும் சமையல் கூடத்தை நேரில் பார்வையிட்டு சேலம் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.Body:

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை பகுதியில் மனித கழிவுகளின் மூலம் எரிவாயு உற்பத்தி செய்து அதன் மூலம் செயல்படும் சமையல் கூடத்தை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பார்வையிட்டார்.

தொடர்ந்து எருமாபாளையம் மெயின் ரோடு பகுதியில் உள்ள புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமையல் கூட்டத்திலும் அவர், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் .

இது குறித்து அவர் கூறுகையில்,
மனிதக் கழிவிலிருந்து உற்பத்தி செய்யப் படும் எரிவாயு மூலம் செயல்படும் சமையல் கூடத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

ஒரே நேரத்தில் 60க்கு மேற்பட்ட குடும்பத்தினர் இந்த சமையல் கூடத்தில் சமைக்கின்ற வகையில் இந்த திட்டம் துவங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Conclusion:
இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.