சேலம் மாநகராட்சி பகுதியில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. 18 கோடியே எட்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திருமணிமுத்தாறு கரைகள் அபிவிருத்தி பணியும் நடந்து வருகிறது. இது தவிர திருமணிமுத்தாறு கரை பகுதியில் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
அதேபோல், இந்த திருமணிமுத்தாறு பகுதியில் வியாபாரிகள், பொதுமக்கள் நடந்து சென்று வந்ததால், நடைபாலம் பழமையானது. அதையும் இடித்து அகற்றிவிட்டு புதிதாக நடைபாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நடை பால பணிகளையும் திருமணிமுத்தாற்றில் நடந்துவரும் பணிகளையும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இன்று (ஜூன் 20) ஆய்வு செய்தார். பின்னர், அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.