சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சுகுமார் (75). மர வியாபாரியான இவர் தனது மனைவி பாக்கியத்துடன் இருசக்கர வாகனத்தில் நேற்றிரவு (பிப். 24) தனது உறவினரின் திருமணத்திற்குச் சென்றார்.
சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவைத் தாண்டியதும் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 25 சவரன் நகை, நான்கு லட்சம் ரூபாய் உள்ள பணப்பை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக, அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதனிடையே அன்னதானப்பட்டி காவல் துறையினரைத் தொடர்புகொண்ட கெஜல்நாயக்கன்பட்டி ஊராட்சித் தலைவர், சலவைத் தொழிலாளி ரமேஷ் தன்னிடம் ஒரு பையைக் கொடுத்துள்ளார். அதில் 25 சவரன் நகை, நான்கு லட்சம் ரூபாய் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மர வியாபாரி சுகுமார் உள்ளிட்டோர் நேரில் சென்று நகை, பணத்தைப் பெற்றுக் கொண்டனர். நகை, பணத்தை ஒப்படைத்த தொழிலாளி ரமேஷுக்குப் பொதுமக்கள் பாராட்டும், சேலம் காவல் துறை ஆணையர் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினர்.
இதையும் படிங்க:பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவில் 30 சவரன் தங்க நகை திருட்டு