ETV Bharat / state

ஆகஸ்ட்டில் அரசுப் பொருட்காட்சி! ஆய்வு செய்த ஆட்சியர்

சேலம்: ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கவிருக்கிற அரசுப் பொருட்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்க இருக்கிறார் .

collector visit
author img

By

Published : Jul 28, 2019, 10:21 AM IST

சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவை ஒட்டி சேலம் போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி நடத்தப்படும்.

ஆனால் தற்பொழுது போஸ் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் அரசுப் பொருட்காட்சி பள்ளப்பட்டி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள காலி இடத்தில் அமைக்கப்பட்டுவருகிறது.

ஆய்வு செய்யும் ஆட்சியர்

இந்த இடத்தில் 35-க்கும் மேற்பட்ட அரசு அரங்குகள், 20-க்கும் மேற்பட்ட தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டுவருகின்றன. இது தவிர குழந்தைகளுக்கான ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு கருவிகளும் அமைக்கப்பட்டுவருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார். ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இந்தப் பொருட்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து-வைக்கவுள்ளார்

Intro:சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாநகராட்சி ஆணையாளர் பொருள்காட்சி இடத்தை பார்த்து ஆய்வு மேற்கொண்டனர்.

Body:சேலத்தில் ஆடி பண்டிகையையொட்டி ஆகஸ்ட் முதல் வாரத்தில் அரசு பொருட்காட்சி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சேலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடப்பது வழக்கம் இதுபோல இந்த ஆண்டும் விழா தொடங்கி நடந்து வருகிறது விழாவினை ஒட்டி சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தற்பொழுது போஸ் மைதானத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப் பட்டுள்ளதால் அரசு பொருள்காட்சி பள்ளப்பட்டி பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள காலி இடத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த இடத்தில் 35 இற்கும் மேற்பட்ட அரசு அரங்குகள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர குழந்தைகள் விளையாட ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக் கருவிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை சனி மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் சுற்றிப் பார்த்து ஆய்வு செய்தார் கழிவறை வசதி, வாகனங்கள் வந்து செல்லும் வசதி மழை வந்தால் பொதுமக்கள் உறங்குவதற்கான இட வசதி உள்ளதா என ஆட்சித்தலைவர் ராமன் பார்வையிட்டு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மாநகர துணை ஆணையாளர் தங்கதுரை உதவி கமிஷனர் செல்வராஜ் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அரசு பொருட்காட்சி ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள் பொருட்காட்சியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைக்க உள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.