ETV Bharat / state

2021ஆம் ஆண்டுக்கான சுருக்கமுறைத் திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சேலம் மாவட்டத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான சுருக்கமுறைத் திருத்த வரைவு வாக்காளர் பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர் ராமன் இன்று வெளியிட்டார்.

author img

By

Published : Oct 7, 2020, 2:52 PM IST

salem draft Voter List
2021ஆம் ஆண்டுக்கான சுருக்கமுறை திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

சேலம்: 2021ஆம் ஆண்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதில், கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் ராமன், சேலம் மாவட்டத்தின் சுருக்கமுறைத் திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகர்களுக்கும் தனித்தனியே வழங்கினார்.

தொடர்ந்து ஆட்சியர் ராமன் கூறுகையில், "இந்த வாக்காளர் பட்டியல் வருகிற 15ஆம் தேதிவரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும்.

அந்தந்த வாக்குச்சாவடிகளில் நேரடியாகச் சென்று வாக்காளர்கள் தங்கள் பெயர், விவரங்களை அறிந்து கொள்ளலாம். இது குறித்து சந்தேகம் ஏதும் ஏற்பட்டால் எழுத்துப்பூர்வமாக அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், கட்சிப் பிரதிநிதிகள் புகார் கொடுத்தால் தேர்தல் ஆணையத்தின் அனைத்து வழிகாட்டுதலின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

இந்தப் புதிய சுருக்கமுறைத் திருத்த வாக்காளர் பட்டியலின்படி, சேலம் மாவட்டத்தில் 29 லட்சத்து 68 ஆயிரத்து 673 வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாயிரத்து 276 வாக்குச்சாவடிகள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் 14 லட்சத்து 83 ஆயிரத்து 369 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 85 ஆயிரத்து 533 பெண் வாக்காளர்களும், இதர வாக்காளர்கள் 171 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தொடர்ந்து உயர்ந்து வரும் மேட்டூர் அணை நீர்மட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.