ETV Bharat / state

வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்!

சேலம்: அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.

author img

By

Published : Oct 10, 2020, 10:18 AM IST

salem Collector raman inspection
salem Collector raman inspection

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறையின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்," தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிடவும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்.

அவ்வாறு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற திட்டங்களை சேலம் மாவட்டத்தில் முழுமையாக நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் பணியாற்றி வருகின்றது. அந்த வகையில் இன்றைய தினம் சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒன்றியத்தில் கடந்த 2016 - 17 ஆம் ஆண்டு முதல் 2019 - 20 ஆம் ஆண்டு வரை கடந்த 4 ஆண்டுகளில் ரூ.81.28 கோடி மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 982 வளர்ச்சித் திட்டப் பணிகள், அடிப்படை வசதி மேம்பாட்டுப்பணிகள் எடுக்கப்பட்டு இதுவரை பல்வேறு நிதித்திட்டத்தின் கீழ் ரூ.62.20 கோடி மதிப்பீட்டில் 8 ஆயிரத்து 357 பணிகள் முடிக்கப்பட்டு, மீதமுள்ள பணிகள் ரூ.19.08 கோடி மதிப்பீட்டில் 625 பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமெனவும், மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி மேம்பாட்டுப்பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. " என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டடப்பட்டு வரும் பணியினையும், அனுப்பூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.17.65 இலட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் கட்டப்பட்டு வரும் பணியினையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது கூடுதல் இயக்குநர் / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நா.அருள்ஜோதி அரசன், அயோத்தியாப்பட்டடணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பார்வதி மணி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.பி.மணி, உதவி செயற்பொறியாளர் அருள், அயோத்தியாப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:

முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதம் வசூலித்த கோட்டாட்சியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.