ETV Bharat / state

மக்கள் கூடும் இடங்களில் மணிக்கொருமுறை கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் - மாவட்ட ஆட்சியர் - சேலம் கருணா தடுப்பு நடவடிக்கை

சேலம்: மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

salem-collector-press-meet
salem-collector-press-meet
author img

By

Published : Aug 13, 2020, 7:32 AM IST

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ ராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பாதுகாப்பு முனெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் தொடந்து கிருமி நாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், நகைக்கடைகள், உணவு விடுதிகள், துணிக்கடைகள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முறையாக தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கிருமிநாசினி தெளிக்கப்பட வேண்டும்.

மேலும் அவற்றில் உள்ள அறைகள் அனைத்தும் காற்றோட்டமாகவும், நன்கு வெளிச்சம்படும் படியும் அனைத்து கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும்.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத கடைகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மீது அந்தந்த பகுதிகளில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் மூலம் அபராதம் விதிக்கப்படும். "என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.