ETV Bharat / state

"சேலம் விமான நிலையத்திற்கு கருணாநிதி பெயர்" - எம்.பி. பார்த்திபன்! - flight service

MP Parthiban: சேலம் விமான நிலையத்திற்கு விரைவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்திற்கு விரைவில் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என எம் பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 29, 2023, 4:53 PM IST

சேலம் விமான நிலையத்திற்கு விரைவில் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என எம் பி பார்த்திபன் தெரிவித்துள்ளார்

சேலம்: ஓமலூர் அடுத்துள்ள காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னைக்கு கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தினசரி விமான சேவை செயல்பட்டு வந்தது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், கரோனா காலக் கட்டத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவையை கொண்டு வர வேண்டும் என சேலம் மற்றும் அண்டை மாவட்ட பொதுமக்கள், அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில், பெங்களூர் - சேலம் - கொச்சின் வழித்தடத்தில் கடந்த 16ஆம் தேதி விமான சேவை தொடங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது சேலம் - சென்னை இடையேயான விமான சேவை மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு இன்று (அக். 29) முதல் துவங்கி உள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து சேலம் வந்த முதல் விமானத்தில் கோவா கவர்னர் ஸ்ரீதரன் பிள்ளை உள்பட 43 பயணிகள் பயணித்தனர்.

அவர்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உற்சாக வரவேற்பு அளித்தார். இதேபோல், சேலத்தில் இருந்து சென்னை புறப்பட்ட விமானத்தில், சேலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்பட 64 பயணிகள் சென்றனர்.

இன்று முதல் தினசரி இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில், காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் புறப்பட்டு 12.30 மணிக்கு சேலம் வந்தடையும் எனவும், அதே விமானம் சேலத்தில் இருந்து 12:50க்கு புறப்பட்டு, 1:45 மணிக்கு சென்னை சென்றடையும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த விமானத்தில் நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் உள்ளிட்டோரும் பயணித்தனர். நடிகை நமிதாவை கண்டதும் ரசிகர்கள் மற்றும் பயணிகள் பூங்கொத்து கொடுத்து, அவருடன் செல்பி எடுத்தனர். தொடர்ந்து அவர் கூறுகையில், "விமானத்தில் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிகவும் பயனளிக்கும் வகையில் இந்த விமான சேவை உள்ளது" என்றார்.

அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எம்.பி பார்த்திபன், "சேலம் மாவட்டம் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வளர்ச்சி அடைய, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பல்வேறு திட்டங்களைத் தந்தார். எனவே, அவரின் நினைவாக சேலம் விமான நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி விமான நிலையம் என்று பெயர் சூட்ட, விரைவில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவேன். அதனைத் தொடர்ந்து, விரைவில் அவரின் பெயர் சூட்டப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை - சேலம் இடையே மீண்டும் விமான சேவை..! மூன்றரை ஆண்டுகளுக்கு பின் தொடக்கம்! டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.