ETV Bharat / state

சேலம் அதிமுக வேட்பாளர் வழக்கறிஞர்களிடம் வாக்கு சேகரிப்பு - சேலம் மக்களவைத் தொகுதி

சேலம்: அதிமுக சார்பில் சேலம் மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கே.ஆர்.எஸ். சரவணன் இன்று மாவட்ட நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Salem constituency ADMK candidate campaign
author img

By

Published : Apr 15, 2019, 10:37 PM IST

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வின்போது சேலம் மாவட்ட அதிமுகவின் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்னையன் வழக்கறிஞர்களிடையே உரையாற்றி, கே.ஆர்.எஸ். சரவணனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில், 'இலங்கை தமிழர்களின் சீரழிவுக்குக் காரணமான திமுக காங்கிரஸ் கட்சிகள் இந்தத் தேர்தலோடு முடிந்துவிட வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 2 ஜி ஊழல் மூலம் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடித்த திமுக-காங்கிரஸ் கட்சியினருக்கு இந்த மக்களவைத் தேர்தல் மூலம் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்' என்று வழக்கறிஞர்களிடையே வலியுறுத்தினார்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியின்போது பாரதிய ஜனதா சேலம் மாவட்டத் தலைவர் கோபி, தேமுதிக மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், பாமக மாவட்ட பொறுப்பாளர் ரத்தினம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏராளமானவர்கள் உடனிருந்தனர். மேலும், அதிமுகவின் சேலம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் பிரதிநிதிகளும் வாக்குச் சேகரிப்பில் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

அதிமுக வேட்பாளர் வழக்கறிஞர்களிடம் வாக்கு சேகரிப்பு

Intro:சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர். எஸ். சரவணன் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

Body:சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கே. ஆர்.எஸ். சரவணன் இன்று மாவட்ட நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வின்போது சேலம் மாவட்ட அஇஅதிமுக வின் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பொன்னையன் வழக்கறிஞர்களிடையே உரையாற்றி, கே.ஆர்.எஸ். சரவணனுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

வழக்கறிஞர்கள் மத்தியில் பேசிய பொன்னையன், " இலங்கை தமிழர்களின் சீரழிவுக்கு காரணமான திமுக காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலோடு முடிந்து விட வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

2 ஜி ஊழல் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை, மக்கள் வரிப் பணத்தை கொள்ளையடித்த திமுக காங்கிரஸ் கட்சியினருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்" என்று வழக்கறிஞர்களிடையே வலியுறுத்தினார்.

இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியின்போது பாரதிய ஜனதா சேலம் மாவட்டத் தலைவர் கோபி , திமுக மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பாமக மாவட்ட பொறுப்பாளர் ரத்தினம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பிரதிநிதிகள் ஏராளமானவர்கள் உடனிருந்தனர்.

Conclusion:மேலும் அதிமுகவின் சேலம் மாவட்ட வழக்கறிஞர் பிரிவின் பிரதிநிதிகளும் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.